/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 'டாய் சி' மாநாடு துவக்கம்; தற்காப்பு கலை குறித்து நான்கு நாள் பயிற்சி

ADDED : செப் 19, 2024 11:10 PM

கோவை : சர்வதேச அளவிலான 'டாய் சி' மாநாடு கோவையில் துவங்கியது. இதில் பிரபல 'டாய் சி' ஆசிரியர் டாக்டர் பால் லாம் பங்கேற்றார்.
மனம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்டவை மேம்படுவதற்கு சிறந்த பயிற்சியாக உலக அளவில் 'டாய் சி' கலை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
தற்காப்பு கலைகளில் ஒரு வகையான 'டாய் சி'யில் பலரும் பயிற்சி பெற்று வருகின்றனர். மனித வாழ்விற்கு இந்த கலையின் பயன்பாடுகள், முறையான பயிற்சிகள் மற்றும் முழுமையான தகவல்களை வழங்கும் விதமாக கோவையில் நித்யா குருகுல ஒருங்கிணைப்பில் 'டாய் சி' மாநாடு நேற்று துவங்கியது.
இதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல டாய் சி ஆசிரியர் டாக்டர் பால் லாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நித்யா குருகுல சி.இ.ஓ., சஷி சந்திரன், பைமெட்டல் பியரிங்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிவசைலம் நாராயணன், நித்யா குருகுல அறங்காவலர் பிரசாந்த் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோயமுத்துார் கிளப்பில் நான்கு நாட்கள், மாநாடு நடக்க உள்ளது. முதல் நாளான நேற்று நுாற்றுக்கும்மேற்பட்டோர் பங்கேற்றனர்.