ADDED : ஏப் 09, 2025 10:12 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் பூஜை தையல் கலைஞர்கள் விழாக்குழுவினரின் செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் இருளப்பன் தலைமை வகித்தார். அதில், 25 ஆண்டுகளாக தேர் பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வரவு, செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டது.
'டிரஸ்ட்' அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டன. புதிய மகளிர் நிர்வாகிகள் ராணி, சுமதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. டிச., மாதத்துக்குள் சங்கத்துக்கு இடம் வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
