/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தக் லைப்' திரைப்படம் 100 தியேட்டர்களில் 'ரிலீஸ்'
/
'தக் லைப்' திரைப்படம் 100 தியேட்டர்களில் 'ரிலீஸ்'
ADDED : ஜூன் 01, 2025 01:33 AM

நடிகர் கமல் நடித்துள்ள 'தக் லைப்' திரைப்படம், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 100 திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 5ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில், கமல் பேச்சு சர்ச்சையான நிலையில், 'கமல் மன்னிப்பு கேட்கும் வரை, அவரது திரைப்படங்களை வெளியிட மாட்டோம்' என, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. ஆனால், மன்னிட்பு கேட்க மாட்டேன் என கமல் கூறியுள்ளார். இதனால், கர்நாடகாவில் திட்டமிட்டபடி, திரைப்படம் வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், 100 திரையரங்குகளில், 'தக் லைப்' திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.