/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி நுரையீரலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்!
/
இனி நுரையீரலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்!
இனி நுரையீரலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்!
இனி நுரையீரலை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்!
ADDED : அக் 26, 2024 11:28 PM

சுற்றுச்சூழல் மாசுபாடு, வயது முதிர்வு, புகைபிடித்தல், உடல் உழைப்பு இல்லாமை மற்றும் உணவுப் பழக்கம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, முதியவர்களுக்கு சுவாசநோய்கள் அதிகரித்து வருகின்றன.
நுரையீரலை பாதுகாக்கவும், நுரையீரல் நோயில் இருந்து தப்பிக்கவும், நுரையீரல் நிபுணர் டாக்டர் நந்தகோபால் ஆலோசனைகளை கூறினார்.
முதியவர்கள் துாசி, புகை, குளிரில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து நுரையீரல் பிரச்னை இருந்தாலோ, அடிக்கடி சளி, நுரையீரல் தொல்லை இருந்தாலோ அதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
65 வயதை கடந்தால், நுரையீரலை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நிமோகாக்கல் தடுப்பூசியை, ஒரு வருடத்தில் 2 முறை செலுத்தி கொள்ள வேண்டும்.
நுரையீரலை பாதுகாக்க யோகா, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி முக்கியம். காலை நேரத்தில் சுத்தமான காற்று உள்ள இடங்களில், மூச்சு பயிற்சி செய்வது நல்லது. முதுமைகாலங்களில் புகை பழக்கம் கூடவே கூடாது.
வருடத்தில் ஒரு முறை, நுரையீரல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. புரோட்டின் குறைபாட்டால் தசை வலிமை குறைந்து கை, கால்கள் வலுவிழந்து வரும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
உடல் பருமன் அதிகம் இருந்தாலும், நுரையீரலுக்கு பணி அதிகரித்து மூச்சு விட கஷ்டம் ஏற்படும். அதேபோல நுரையீரலில் நீர் கோர்த்தல் பிரச்னைகள், முதுமை காலத்தில் ஏற்படலாம். அவை இரண்டு வகை.
ஒன்று, நுரையீரலுக்கு வெளியே. மற்றொன்று உள்ளே. இதயம், சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு நுரையீரலுக்கு உள்ளே நீர் கோர்த்து விடும். புரோட்டின் குறைபாடு, டி.பி., நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு, வெளியே நீர் கோர்த்து விடும்.
நுரையீரலுக்கு உள்ளே நீர் கோர்ப்பதை தடுக்க, சீரான அளவில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியே நீர் கோர்ப்பதை தடுக்க, புரோட்டின் குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.