UPDATED : நவ 27, 2026 07:40 PM
ADDED : நவ 27, 2026 07:40 PM
அ நிறம் | அளவு
கோவை: கலெக்டர் அலுவலகத்தில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில், மண்டல அளவிலான 2வது காலாண்டு வங்கியாளர் மதிப்பாய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.,) கீழ் வங்கிகளால் கடன் வழங்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான மானியக் கோரிக்கைகளை, உடனடியாக இணையதளத்தில் சமர்ப்பிக்கவும், கடன் பெற்று தொழில் துவங்கியுள்ள பயனாளிகளுக்கு மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
