/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 11, 2025 10:20 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், கோரிக்கை ஆர்ப்பாட்டம், கிணத்துக்கடவில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். கோரிக்கை குறித்து செயலாளர் மணியன் விளக்கினார். துணை தலைவர் தங்கவேலு வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பொன்னையன் பேசினார். பொருளாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும், 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனக்காவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும்.மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் உண்மையான காசில்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

