/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
/
மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
ADDED : நவ 11, 2025 10:20 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மேம்பாலத்தில் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு மேம்பாலத்தின் மீது பெண் ஒருவர் ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.
இதை கண்ட வாகன ஓட்டுநர்கள், கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், பெண்ணை மீட்டு விசாரணை செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் கூறியதாவது:
கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த யாஸ்மின்,25, என்பதும், அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், மேட்டுப்பாளையத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறியதால் பிரச்னையானது.
கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ரோட்டின் நடுவே நீண்ட நேரம் நின்றதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் வாயிலாக கிணத்துக்கடவு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது மீட்கப்பட்டார். இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

