/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓய்வூதியர்களின் கோரிக்கை புறக்கணிக்கிறது தமிழக அரசு'
/
'ஓய்வூதியர்களின் கோரிக்கை புறக்கணிக்கிறது தமிழக அரசு'
'ஓய்வூதியர்களின் கோரிக்கை புறக்கணிக்கிறது தமிழக அரசு'
'ஓய்வூதியர்களின் கோரிக்கை புறக்கணிக்கிறது தமிழக அரசு'
ADDED : ஆக 26, 2025 10:44 PM
கோவை; 'அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய நிலுவைகளை விரைந்து வழங்க வேண்டும்' என, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நாகராஜ் அறிக்கை:
ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. புதிய மருத்துவ காப்பீடு திட்டம் ஓய்வூதியர்களில், பெரும்பாலானவர்களுக்கு பயனற்றதாக உள்ளது. மாதம் 497 ரூபாய் ஓய்வூதியத்தில் பிடிக்கப்படு கிறது. அதற்கான பலனை பெற முடியவில்லை.
குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் உரிய தேதிக்குள் அகவிலைப்படி வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியதும், மின்வாரிய ஊழியர்களுக்கும் வழங்க, அரசின் அனுமதியை மறுபடியும் பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்தை, உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.