/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு ஜூனியர் அணி தேர்வு; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
/
தமிழ்நாடு ஜூனியர் அணி தேர்வு; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
தமிழ்நாடு ஜூனியர் அணி தேர்வு; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
தமிழ்நாடு ஜூனியர் அணி தேர்வு; வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:42 PM
கோவை; தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள், பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, துாத்துக்குடி மற்றும் தென்காசியில் நடக்கிறது.
இதற்கென கோவை மாவட்ட அணிகள் தேர்வு காளப்பட்டியில் உள்ள சுகுணா பள்ளியில் இன்று காலை, 8:00 மணிக்கு நடக்கிறது. வீரர், வீராங்கனைகள் கடந்த, 2006ம் ஆண்டு ஜன., 1ம் தேதி அன்று அல்லது அதன்பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
அணிகளுக்கான தேர்வில் பங்கேற்பவர்கள், ஆதார் அட்டை, தற்போது பயிலும் கல்வி நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு, 98430 32222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என, கோவை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் செந்தில்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.