/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க நாள் விழா
/
தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க நாள் விழா
ADDED : அக் 25, 2025 12:16 AM
அன்னுார்: அன்னுாரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க நாள் விழா நடந்தது.
தமிழக ஆசிரிய கூட்டணி 1983ம் ஆண்டு அக். 23 ம் நாள் துவக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இயக்க நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்னுார் வடக்கு துவக்கப்பள்ளி முன்பு நடந்த விழாவில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் கொடியேற் றினார்.விழாவில் துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊக்க ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவது என உறுதி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கூட்டணியின் வட்டார செயலாளர் ஆனந்தகுமார், மகளிர் அணி மாவட்ட தலைவர் அமுதா, துணைத்தலைவர் சரஸ்வதி, பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

