/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பு குறைக்க தொழில்நுட்ப ஆலோசனை
/
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பு குறைக்க தொழில்நுட்ப ஆலோசனை
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பு குறைக்க தொழில்நுட்ப ஆலோசனை
மழையால் ஏற்படும் மகசூல் இழப்பு குறைக்க தொழில்நுட்ப ஆலோசனை
ADDED : அக் 25, 2025 12:17 AM
மேட்டுப்பாளையம்: வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை வெள்ளத்தில், நெல் பயிர் சாகுபடியில் ஏற்படும் மகசூல் இழப்பினைக் குறைப்பதற்கு தொழில்நுட்ப ஆலோசனையை பின்பற்ற விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியுதாவது:-
கோவை மாவட்டத்தில் நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் இதுவரை சுமார் 448 எக்டர் பரப்பளயில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் வயல்களில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கியிருக்கும் போது, போதிய காற்றோட்டம் இல்லாததாலும், மண்ணிலுள்ள ஊட்டச்சத்துகள் மழை நீருடன் கலந்து வெளியேறுவதாலும், போதிய ஊட்டச்சத்துகள் நெல் பயிர்களுக்கு கிடைப்பது இல்லை. இதனால் இலைகள் வெளிரி மஞ்சள் நிறமாக மாறும். வளர்ச்சி குன்றி காணப்படும்.
இதனை தடுக்க வயலைச் சுற்றி நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி, வயலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான மழை நீரினை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். மழை காலங்களில் வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், உரம் இடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும்.
வெள்ள நீர் வடிந்தவுடன், ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் ஆகியவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு வைத்திருந்து, 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன் கலந்து இட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.------

