/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய மூத்தோர் தடகள போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற தமிழக அணி
/
தேசிய மூத்தோர் தடகள போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற தமிழக அணி
தேசிய மூத்தோர் தடகள போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற தமிழக அணி
தேசிய மூத்தோர் தடகள போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற தமிழக அணி
ADDED : மே 01, 2025 04:33 AM
கோவை : கர்நாடகாவில் நடந்த மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.
கர்நாடக மாநிலம், மைசூரில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தன. இதில், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 1,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அணிக்காக, கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தை சேர்ந்த, 90 வீரர்கள், 56 வீராங்கனைகள் என, 146 பேர் பங்கேற்றனர்.
இதில், 30 முதல், 95 வயது வரையிலான ஆண்கள், பெண்களுக்கு நடை பயணம், ஓட்டப்பந்தயம், தடை தாண்டு தல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுல் உட்பட, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணியினர், தனி நபர் ஆண்கள் பிரிவில், 19 தங்கம், 16 வெள்ளி, 19 வெண்கலம் மற்றும் பெண்கள் பிரிவில், 18 தங்கம், 20 வெள்ளி, 22 வெண்கலம் என, 37 தங்கம், 36 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில், 400 மீ., 1,600 மீ., தொடர் ஓட்டம் மற்றும், 400 மீ., இருபாலர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில், தமிழ்நாடு அணி தங்கம் வென்றுள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோவை அணியினரை, மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் வேலுசாமி, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.