/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையின் தலைநகரமான தமிழகம்! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வேதனை
/
போதையின் தலைநகரமான தமிழகம்! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வேதனை
போதையின் தலைநகரமான தமிழகம்! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வேதனை
போதையின் தலைநகரமான தமிழகம்! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வேதனை
ADDED : செப் 20, 2024 09:31 AM
பொள்ளாச்சி: ''இந்தியாவில், போதையின் தலைநகரமாக தமிழகம் மாறியுள்ளது. போதை பொருள் கடத்தல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வடக்கிப்பாளையத்தில் எம்.எல்.ஏ., பொதுநிதியில் மேற்கொள்ளும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
போதையில் தத்தளிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் போதையின் தலைநகரமாக தமிழகம் உள்ளது.
பொள்ளாச்சி அருகே மாவடப்பில் இருந்து வாங்கி வந்த சாராயத்தை குடித்த, மஞ்சநாயக்கனுாரை சேர்ந்தவர்கள் உயிருக்கு போராடினர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
தற்போது, ஆனைமலை அருகே செமணாம்பதியில் கேரளா கலால்துறையினர், எரிசாராயத்தை பிடித்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
போதை வஸ்துக்கள், கஞ்சா, பல மாநிலங்களுக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் இங்கு இருந்து கடத்தப்படுகிறது.
இதையெல்லாம் தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்ப்பது வேதனையாக உள்ளது. போதை பொருள் கடத்தல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., வளர்ந்து வருவதை பொறுக்க முடியாமல், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது, மூன்றரை ஆண்டுகள் கழித்து, இப்போது ஊழல் நடந்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று, ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.