/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2025 11:16 PM

கோவை; 'தொழிலாளர் நலன் கருதி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்' என, தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பு செயலாளர் நாகேந்திரன் கூறுகையில், ''தமிழகத்தில், 10 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பஞ்சாலை கழக மில்கள், நாடு முழுவதும் மூடப்பட்டதால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
தேவையற்ற போராட்டத்தால், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க முத்தரப்பு கமிட்டி அமைத்து பேச்சு நடத்த வேண்டும்,'' என்றார்.