/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் கைது
/
தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் கைது
ADDED : பிப் 04, 2024 12:32 AM
கோவை, பிப்.4-
தமிழக வெற்றி கழக கட்சி பொறுப்பாளரை, போலீசார் கைது செய்தனர்.
நடிகர் விஜய் நேற்று முன்தினம், தமிழக வெற்றி கழகம் என்ற, புதிய கட்சியை துவங்கினார். இதையடுத்து, அவரது கோவை ரசிகர்கள் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில், கோவை செல்வபுரம் போலீசார், தெலுங்கு பாளையம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒருவர், தடையை மீறி பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தார். அதை பார்த்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தெலுங்குபாளையம், காரமடை வீதியை சேர்ந்த சிலம்பரசன், 39, என்பதும், 76வது வார்டு தமிழக வெற்றி கழக கட்சி பொறுப்பாளர் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின் ஜாமீனில் விடுவித்தனர்.