/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வணிக கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை; துறை ரீதியான ஆய்வு அவசியம்
/
வணிக கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை; துறை ரீதியான ஆய்வு அவசியம்
வணிக கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை; துறை ரீதியான ஆய்வு அவசியம்
வணிக கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை; துறை ரீதியான ஆய்வு அவசியம்
ADDED : ஏப் 06, 2025 10:19 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், கடைகளின் பெயர் பலகைகள் உரிய முறையில் மாற்றுவதற்கு, தமிழ்வளர்ச்சித் துறையினர் ஆய்வும் அவசியம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023, தொழில் உரிமம் விதிப்படி, அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள், தமிழில் பெயர் பலகை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், 5:3:2 என்ற அளவில், முறையே, தமிழ், ஆங்கிலம், பிறமொழியில் பெயர்கள் இடம் பெற வேண்டும்.ஒரே பலகையில், சீர்திருத்த எழுத்து வடிவில் இடம் பெறவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நகராட்சியில், தொழில் உரிம கட்டணம் செலுத்த வரும் வணிகக் கடைக்காரர்களிடம், தமிழில் பெயர் பலகை வைக்கவும், விதிமுறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழில் பெயர் பலகை உள்ளதா என்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறையினரும் முறையாக ஆய்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நகராட்சி வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால், நகரில், துறை ரீதியான அதிகாரிகள், பிற மொழி பெயர் பலகை வைத்துள்ள வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வதோ அல்லது அறிவுறுத்தி புதிய பெயர் பலகை வைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைகளின் பெயர் பலகை அளவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில், வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையில், பெரிய அளவிலான பெயர் பலகைகள் காணப்படுகின்றன. விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.