/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு முப்பெரும் விழாவில் தமிழ் அமைப்புகளுக்கு பாராட்டு
/
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு முப்பெரும் விழாவில் தமிழ் அமைப்புகளுக்கு பாராட்டு
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு முப்பெரும் விழாவில் தமிழ் அமைப்புகளுக்கு பாராட்டு
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு முப்பெரும் விழாவில் தமிழ் அமைப்புகளுக்கு பாராட்டு
ADDED : ஜன 30, 2025 11:29 PM
கோவை: 'தினமலர், இந்தியன் நீர்ப்பணிகள் சங்கம், 'எய்ம்' தன்னார்வத் தொண்டு நிறுவனம், திருக்குறள் ஆய்வுக் கழகம் ஆகியன சார்பில் கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் நாளை முப் பெரும் விழா நடக்கிறது.
'தினமலர்', இந்தியன் நீர்ப்பணிகள் சங்கம், 'எய்ம்' தன்னார்வத் தொண்டு நிறுவனம், திருக்குறள் ஆய்வுக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் சமீபத்தில் மூன்று கல்லுாரிகளில் நடந்தது.
மாணவர்கள், 'நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என்னுடைய நவீன சிந்தனைகள்' மற்றும் 'நீர் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் நம்முடைய பங்கு' உள்ளிட்ட தலைப்புகளில் மூன்று நிமிடங்கள் தமிழில் பேசியது அனைவரையும் கவர்ந்ததுடன், சிந்திக்கவும் வைத்தது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, நீர் வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு, தமிழ் அமைப்புகளுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா, குனியமுத்துார் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், நாளை (பிப்., 1) நடக்கிறது.
காலை, 9:00 மணிக்கு துவங்கும் விழாவானது, முன்னாள் கல்லுாரி கல்வி இயக்குனர் குமாரசாமி தலைமையிலும், திருக்குறள் ஆய்வுக்கழகம் தலைவர் அன்வர்பாட்சா, 'எய்ம்' அறக்கட்டளையின் ஆலோசகர் நாகராசு முன்னிலையிலும் நடக்கிறது.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சான்றோர்களுக்கும் பரிசுகள் வழங்க உள்ளார். திருக்குறள் ஆய்வுக் கழகத்தின், 50வது பொன்விழா ஆண்டு, 'எய்ம்' அறக்கட்டளையின், 20வது ஆண்டையொட்டி, கோவை மாவட்டத்தில் சிறப்பாக தமிழ்ப் பணியாற்றிவரும் தமிழ் அமைப்புகளுக்கு சிறப்பு செய்யப்படுகிறது.
அதன்படி, உலகத் தமிழ் நெறிக் கழகம், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம், கவையன்புத்துார் தமிழ்ச்சங்கம், கம்பன் கலைக் கூடம், வசந்த வாசல் கவி மன்றம், கோவை முத்தமிழ் அரங்கம், தமிழ்நாடு இலக்கியப்பேரவை, அறம் அறிவுப் பட்டறை, கனவு மெய்ப்பட படைப்பகம், தமிழ்ச் சங்கமம் காப்பு கூட்டியக்கம், எய்ம் அறக்கட்டளை, திருக்குறள் ஆய்வுக்கழகம் ஆகிய, 10 தமிழ் அமைப்புகள் பாராட்டி சிறப்பிக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் சிறப்பாக துாய்மைப் பணியாற்றி வரும், 10 துாய்மை பணியாளர்களை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

