/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தமிழ் எங்கள் உயிர்மெய்' பேச்சு போட்டி: இறுதிச்சுற்று வரும் 11ல் நடக்கிறது
/
'தமிழ் எங்கள் உயிர்மெய்' பேச்சு போட்டி: இறுதிச்சுற்று வரும் 11ல் நடக்கிறது
'தமிழ் எங்கள் உயிர்மெய்' பேச்சு போட்டி: இறுதிச்சுற்று வரும் 11ல் நடக்கிறது
'தமிழ் எங்கள் உயிர்மெய்' பேச்சு போட்டி: இறுதிச்சுற்று வரும் 11ல் நடக்கிறது
ADDED : பிப் 08, 2024 06:38 AM
கோவை : தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீசங்கரா டிவி சார்பில், 'தமிழ் எங்கள் உயிர் மெய்' என்னும், இளைய தலைமுறை பேச்சாளர்களை அடையாளம் காணும் வகையில், பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதன் இறுதிச்சுற்று, கோவை இந்துஸ்தான் கல்லுாரியில், வரும் 11ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கிராமங்களில் பல்வேறு கட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கவித்திறன், உறவுகள், இலக்கியம், பக்தி, தத்துவம், காதல், சினிமா, சிறுகதைகள், பழமொழி, போன்ற பல்வேறு பிரிவுகளில், திறமையை வெளிப்படுத்தியவர்களில் சிறந்த பேச்சாளர்களை, இறுதிப்போட்டிக்கு குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இறுதிப்போட்டி, வரும் 11ல் மாலை, 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர்ஸ்ரீராம் கூறுகையில், “இந்நிகழ்வு, போட்டி மட்டுமல்ல, தமிழ் மொழியின் அழகையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் ஓர் கொண்டாட்டமாக இருக்கும்,'' என்றார்.
நிகழ்வின் இயக்குனர் வாலறிவவன் கூறுகையில், ''தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்களுக்கு முத்தமிழ் விருந்தாக இந்நிகழ்வு இருக்கும். பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்கவுள்ளனர். நாட்டியம், இசை என கலை, இலக்கிய சங்கமம் ஆக இருக்கும். பல்வேறு துறைகளை சேர்ந்த, 9 பேர் இறுதி போட்டியில் திறன்களை வெளிப்படுத்தவுள்ளனர். அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான பாஸ், ராம்நகர் சங்கரா 'டிவி' அலுவலகத்திலும், இந்துஸ்தான் கல்லுாரி மைதானத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 73059 50447 / 89259 10148 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

