/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏப்.13ம் தேதி தமிழ்ச் சங்க விழா
/
ஏப்.13ம் தேதி தமிழ்ச் சங்க விழா
ADDED : ஏப் 09, 2025 06:50 AM
கோவில்பாளையம்; கவையன்புத்துார் தமிழ்ச் சங்க விழா வரும் 13ம் தேதி கோவில்பாளையத்தில் நடைபெறுகிறது.
கவையன்புத்துார் தமிழ்ச் சங்கம் சார்பில், கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில் வரும் 13ம் தேதி காலை 9:30 மணிக்கு, முப்பெரும் விழா நடைபெறுகிறது.
டாக்டர் தீபா கந்தசாமி தலைமை வகிக்கிறார். 106 வயதான சுந்தராம்பாள் கவுரவிக்கப்படுகிறார். எழுத்தாளர் கவிஉழவன் அழக் கொண்ட எல்லாம் அழப்போம்,' என்னும் தலைப்பில் பேசுகிறார்.
நாயன்மார்களை நினைவு கூரும் கவியரங்கம் நடக்கிறது. பழமையும், பாரம்பரியமும் மதிக்கப்படுகிறதா, என்கிற தலைப்பில் வழக்காடு மன்றம் நடக்கிறது.
தமிழ் அமைப்பு நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்பட பலர் பேசுகின்றனர். சான்றோர் கவுரவிக்கப் படுகின்றனர். புதிய நுால் அறிமுக உரை நடக்கிறது. விழாவில் பங்கேற்று தமிழ் அமுதம் பெற தமிழ் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.