/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டூர் அரசு பள்ளியில் தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி
/
கோட்டூர் அரசு பள்ளியில் தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி
ADDED : ஏப் 10, 2025 09:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை,; ஆனைமலை அருகே, கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் முக்கூடல் விழா நடந்தது. தலைமையாசிரியர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். பொருளியல் ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜசேகரன், முன்னாள் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த இலக்கியங்களையும், பாடல்கள் பாடியும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார். அடுத்ததாக பள்ளியின் முன்னாள் மாணவர், ஆனைமலை சரக வனத்துறை அலுவலர் தினகரன், வேலை வாய்ப்பு குறித்தும், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய மரியாதை குறித்து விளக்கினார். ஆசிரியர் சாவித்திரி நன்றி கூறினார்.

