/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தமிழும் சாகாது... வாசிப்பும் சாகாது'
/
'தமிழும் சாகாது... வாசிப்பும் சாகாது'
ADDED : ஜூலை 28, 2025 09:35 PM
கோவை; சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய, 'வெற்றி உங்கள் பக்கம்' மற்றும் 'இதயத்தின் ஓசை' எனும் கவிதை தொகுப்பு நுால்கள், வெளியீட்டு விழா கொடிசியா வளாகம், புத்தகத் திருவிழாவில் நடந்தது.
புத்தகத்தின் முதல் பிரதியை, கோவை எம்.பி.,ராஜ்குமார் வெளியிட்டார், ''புத்தக வாசிப்பு எல்லாம் போய்விடும் என சிலர் நினைக்கின்றனர். தமிழும் சாகாது, வாசிப்பும் சாகாது. புத்தகங்கள் என்றைக்கும் இருக்கும் என்பதற்கு இந்த விழா தான் சாட்சி,'' என்றார்.
கட்டுரை தொகுப்பின் முதல் பிரதியை, பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முன்னாள் செயலர் சம்பத்குமார் பெற்றுக் கொண்டார்.கவிதை தொகுப்பின் முதல் பிரதியை, பாரதியார் பல்கலையின் மகாகவி பாரதியார் உயராய்வு மைய இயக்குனர் சித்ரா பெற்றுக் கொண்டார்.
சிந்தனைக் கவிஞர் கவிதாசன், திருப்பூர் முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், கோவை புத்தகக் கண்காட்சி துணைத் தலைவர் முத்துக்குமார், ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர்சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொடிசியா, புத்தகத்திருவிழாவில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய நுால்களை, கோவை எம்.பி.,ராஜ்குமார் வெளியிட்டார்.

