/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி துவக்கம்
/
தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி துவக்கம்
ADDED : மே 02, 2025 09:13 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளை, சுத்தம் செய்யும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே வறட்சியான காலங்களில், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை கட்டி, அதில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக்கு அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில், 18 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது வறட்சி காலம் என்பதால், வனப்பகுதியில் உள்ள ஓடைகள், குட்டைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. அதனால் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இதில் நான்கு தொட்டிகளுக்கு சோலார் வாயிலாகவும், ஆறு தொட்டிகளுக்கு பைப் வாயிலாகவும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள எட்டு தொட்டிகளுக்கு டிராக்டர் வாயிலாக வாரம் ஒரு முறை, தண்ணீர் நிரப்பப்படுகிறது. மேலும் தண்ணீர் தீர்ந்த் தொட்டிகளுக்கு, உடனுக்குடன் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.