/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலத்தில் தொட்டி; பொதுமக்கள் எதிர்ப்பு
/
கோவில் நிலத்தில் தொட்டி; பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 26, 2024 11:27 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, கோவில் நிலத்தில் நீர் தேக்க தொட்டி கட்டுவதை தடுக்க வேண்டும்,' என, பொதுமக்கள், மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, ஆலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 300 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில், 70 சென்ட் நிலத்தை உள்ளடக்கியதாக உள்ளது.
ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நீர்தேக்க தொட்டி கட்டுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தமிழக ஊரக உள்ளாட்சித்துறையால், குடிநீர் கீழ்நிலைத்தொட்டி கட்டும் பணி நடக்கிறது. கோவில் அபிவிருத்தி, கோவில் விசேஷ காலங்களில் கோவில் திருப்பணி உள்ளிட்ட பணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே, கோவில் நிலத்தை மீட்டு நீர் தேக்க தொட்டி கட்டும் வேலையை நிறுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், பணிகளை நிறுத்தாமல் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

