/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தொழில் திட்டத்துக்கு 100 கிராமங்கள் இலக்கு இதுவரை 36 தேர்வு
/
புத்தொழில் திட்டத்துக்கு 100 கிராமங்கள் இலக்கு இதுவரை 36 தேர்வு
புத்தொழில் திட்டத்துக்கு 100 கிராமங்கள் இலக்கு இதுவரை 36 தேர்வு
புத்தொழில் திட்டத்துக்கு 100 கிராமங்கள் இலக்கு இதுவரை 36 தேர்வு
ADDED : ஜன 11, 2026 02:50 PM
பொள்ளாச்சி: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் முன்னோடி திட்டமான, 'கிராமம் தோறும் புத்தொழில்' திட்டத்தின் கீழ், ஸ்டார்ட் அப் டிஎன் - கோவை மையம் சார்பில், பொள்ளாச்சி வட்டாரத்தில், 'கிராம ஸ்டார்ட் அப்' துவங்கப்பட்டுள்ளது.
இதில், கோவை மாவட்டத்தில், வளந்தாயமரம், சீரப்பா ளையம், சோலபாளையம், தேவம்பாடிவலசு, மலுமிச்சம்பட்டி, அரிசிப்பாளையம் ஆகிய ஆறு கிராமங்களில், 'ஸ்டார்ட் அப்' அடையாளம் காணப்பட்டு, 'ஸ்டார்ட் அப் டிஎன்' சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கோவை 'ஸ்டார்ட் அப் டிஎன்' மண்டல திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் கூறியதாவது:
கிராமங்கள் தோறும், 'ஸ்டார்ட் அப்' திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக பகுதிகளில் புதுமையாளர் கள், தொழில் முனைவோரை ஊக்குவித்து தன்னிறைவு கொண்ட தொழில் முனைவு இயக்கத்தை உருவாக்கு வதாகும்.
கிராம அளவில் தொழில் முனைவு வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பெண்கள், பாரம்பரிய தொழில் புரிபவர்களை இணைப்பதாகு ம்.
வேளாண்மை சார்ந்த மற்றும் வேளாண்மையற்ற பாரம்பரிய தொழில்களை ஊக்குவித்தல், பயிற்சி, வழிகாட்டுதல் வாயிலாக தொழில்களை வளர்ப்ப தாகும்.
தமிழகத்தில், இத்திட்டத்தில், 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதுவரை, 36 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

