தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'விதை உற்பத்தியை 2 மடங்காக்க இலக்கு'

 'விதை உற்பத்தியை 2 மடங்காக்க இலக்கு'

 'விதை உற்பத்தியை 2 மடங்காக்க இலக்கு'


ADDED : மார் 18, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலையில், விதைக் கருத்தரங்கு நடந்தது. 85க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

பல்கலை துணை வேந்தர் (பொ) சுப்ரமணியன், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொன்விழா கண்காட்சியை திறந்து வைத்தார்.

அவர் பேசியதாவது:

தரமான விதைகள், மகசூலை 25 சதவீதம்வரை அதிகரிக்கின்றன. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய தரமான விதைகளே அடிப்படை. வேளாண் பல்கலை, 40 வகையான பயிர்கள் மற்றும் 175 ரகங்களில் 1,800 டன் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வினியோகித்து வருகிறது.

2026---2027ம் ஆண்டில் பல்கலையின் விதை உற்பத்தியை 3,500 டன்னாக அதிகரிக்க இலக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.

தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன், ஆராய்ச்சி மைய டீன் வெங்கடேசன், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் மனோன்மணி, விதை மைய இயக்குநர் உமாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us