மதுபாட்டில் ஸ்கேன் செய்வதில் சிக்கலால் டாஸ்மாக் மூடல்
மதுபாட்டில் ஸ்கேன் செய்வதில் சிக்கலால் டாஸ்மாக் மூடல்
ADDED : ஏப் 27, 2026 10:02 PM
கிணத்துக்கடவு: கோவை மாவட்டத்தில், பல்வேறு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் அறிவிப்பின்றி அரை மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை மூடப்பட்டன.
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில், டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை செய்ய இரண்டு முறை 'க்யூஆர்' கோடு ஸ்கேனும், அதே காலி மது பாட்டிலை திரும்ப பெற ஒருமுறை 'ஸ்கேன்' என, ஒரு பாட்டிலுக்கு, 3 முறை 'ஸ்கேன்' செய்யும் நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.
இதனால், உடனுக்குடன் மது பாட்டில்கள் விற்பனை விவரங்கள் அறியவும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தல் போன்றவைகளை தடுக்க இம்முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் கோவை மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் மதுக்கடைகள் அரை மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை எவ்வித அறிவிப்பும் இன்றி மூடப்பட்டன.
இது குறித்து, டாஸ்மாக் மது விற்பனையாளர் ஒருவரிடம் கேட்ட போது, ''டாஸ்மாக் ஊழியர்கள் மதுபாட்டிலில் உள்ள 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் ஸ்கேன் செய்வது சிரமமாக உள்ளது.
மேலும், பணியாளர்களுக்கு வேலை அதிக அளவு இருப்பதால் சிரமம் ஏற்படுகிறது. மதுக்கடையில் பணியாளர்கள் மற்றும் ஸ்கேன் செய்யும் டிவைஸ் குறைவாக இருப்பதால், வேறு வழியின்றி கடையை அடைத்து, அந்த பணியை மேற்கொண்டோம்,' என்றார்.
