/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
/
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
ADDED : பிப் 17, 2026 06:59 AM

கோவை: மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) மற்றும் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பீளமேடு முதுநிலை மண்டல மேலாளர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடைகளில் 23 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை ஊழியர்கள் மீது திணிப்பதை விட்டு மாற்றுத்திட்டத்தை உருவாக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரதத்தை பஞ்சாலை மாநில சம்மேளனத்தின்(சி.ஐ.டி.யூ.) மாநில துணைத்தலைவர் பத்மநாபன் துவக்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

