sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தீ விபத்தில் பார்சல் சேதம்; இழப்பீடு வழங்க உத்தரவு 

/

 தீ விபத்தில் பார்சல் சேதம்; இழப்பீடு வழங்க உத்தரவு 

 தீ விபத்தில் பார்சல் சேதம்; இழப்பீடு வழங்க உத்தரவு 

 தீ விபத்தில் பார்சல் சேதம்; இழப்பீடு வழங்க உத்தரவு 


ADDED : பிப் 17, 2026 07:00 AM

Google News

ADDED : பிப் 17, 2026 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தீ விபத்தில் சேதமடைந்த துணி பார்சலுக்கு, இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சேரன் மாநகரை சேர்ந்தவர் நியாஷ் அகமது; ஆடிட்டர். பெங்களூரு சென்ற இவர், 20,600 ரூபாய் மதிப்புள்ள துணிகள் வாங்கினார். அவற்றை 2024, ஜன. 20 ல், கே.பி.என். பார்சல் சர்வீஸ் வாயிலாக அனுப்புமாறு கூறி விட்டு, கட்டணத்தை செலுத்தினார்.

துணிகடையினர் பார்சலை கோவைக்கு அனுப்பி வைத்தனர். பல நாட்களாகியும் பார்சல் வரவில்லை. துணி கடையில் விசாரித்த போது, ஏற்கனவே அனுப்பி விட்டதாக தெரிவித்தனர்.

கோவையிலுள்ள பார்சல் நிறுவனத்துக்கு சென்று கேட்ட போது, தீ விபத்தில் பார்சல் சேதம் அடைந்து விட்டதாக அலட்சியமாக பதில் அளித்தனர்.

இழப்பீடு வழங்கவில்லை. பார்சல் அனுப்பிய பிறகு துணி சேதம் அடைந்ததால், துணிக்கடையினர் பொறுப்பேற்க மறுத்தனர்.

இதனால் இழப்பீடு வழங்க கோரி, பார்சல் நிறுவனம் மற்றும் துணிக்கடை மீது கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், 'பார்சல் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், புகார்தாரருக்கு துணிக்கான தொகை, 20,600 ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us