ADDED : ஜூலை 09, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
கோவை: நிர்வாகத்துக்கு எதிராக 'யூடியூப்' சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தாகக் கூறி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன நிர்வாகி ஒருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஊழியர்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கூறி இந்திய தொழிற்சங்க மைய கோவை மாவட்ட குழு (சி.ஐ.டி.யூ.,) சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்யக்கோரியும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் மனோகரன், பொருளாளர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
