ADDED : ஜூலை 09, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.
வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமசந்திரன், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்வம், வால்பாறை இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார், அவர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய இன்ஸ்பெக்டரை சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
