/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்க கூடாது'
/
'டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்க கூடாது'
ADDED : மார் 18, 2024 10:52 PM
அன்னூர்;டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்க கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திருமண மண்டபம் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் ஆகியோருக்கு அறிவுரை வழங்கும் கூட்டம் அன்னூர், சூலுார், கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்தது. இதில் போலீசார் கூறியதாவது:
'தேர்தல் முடியும் வரை மண்டபத்தில் எந்த நிகழ்ச்சி புக்கிங் செய்தாலும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். விருந்து வழங்குதல், கட்சி நிகழ்ச்சி குறித்து அனுமதி இல்லாமல் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். லாட்ஜ் உரிமையாளர்கள், தங்கள் லாட்ஜில் தங்கி உள்ளவர்களின் முழு முகவரியை மொபைல் எண்ணுடன் எழுதி தர வேண்டும்.
அளவுக்கு அதிகமான பணம், பரிசு பொருட்களை கொண்டு வருவது தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கியுள்ளது தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். பார் உரிமையாளர்கள் அரசு அனுமதித்த நேரத்தில் திறந்து, அடைத்துக்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் திறந்திருக்க கூடாது. சட்டவிரோதமாக மது விற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது பாட்டில்களை விற்க கூடாது. டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் அதை கண்காணிக்க வேண்டும். அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
ரெஸ்ட்ராண்ட்களில் மது குடிக்க அனுமதிக்க கூடாது. அனுமதித்த நேரத்துக்குள் கடையை அடைக்கவேண்டும். மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் அறிவுறுத்தினர்.

