/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி; தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2025 10:54 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை மண்டல டாஸ்மாக் கிடங்கு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில், பொள்ளாச்சி ஆ. சங்கம்பாளையம் டாஸ்மாக் கிடங்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை தலைவர் மாயவன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் திருமலைராஜாராம் வரவேற்றார். ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் பரமசிவம் பேசினார். துணை செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்க வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதி, ஓய்வறை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நிர்வாகிகள் கோஷமிட்டனர்.