/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் தொழிலாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 21, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,; டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை சட்டசபையில் மானியக்கோரிக்கைகளாக அறிவிக்க வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக்கில் 22 ஆண்டுகளாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்தல், காலமுறை ஊதியம், ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிப்பது, இ.எஸ்.ஐ., மருத்துவ திட்டத்தை அமல்படுத்துதல், பணிமாறுதல், பணிநியமனம் ஆகியவற்றில், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான டாஸ்மாக் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.