/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரிவசூலிக்கும் பணி தீவிரம் நகராட்சி அதிகாரிகள் சுறுசுறுப்பு
/
வரிவசூலிக்கும் பணி தீவிரம் நகராட்சி அதிகாரிகள் சுறுசுறுப்பு
வரிவசூலிக்கும் பணி தீவிரம் நகராட்சி அதிகாரிகள் சுறுசுறுப்பு
வரிவசூலிக்கும் பணி தீவிரம் நகராட்சி அதிகாரிகள் சுறுசுறுப்பு
ADDED : ஜன 26, 2025 11:25 PM

வால்பாறை ;வால்பாறை நகரில், நிலுவையில் உள்ள வரிவசூல் செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் மொத்தம், 1,900 குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட நகராட்சி கடைகள் மாதவாடகை அடிப்படையில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நிலுவையில் உள்ள வரியினங்களை பொதுமக்கள், வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தி உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று, நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி கமிஷனர் ரகுராமன் உத்தரவின் பேரில், புதுமார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத, கடைகளை கண்டறிந்து, அதிகாரிகள்பூட்டி 'சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வரியினங்களை உடனடியாக அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் வரி செலுத்தாத கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்படும். அதே போல் குடிநீர் வரி செலுத்தாத வீடு மற்றும் கடைகளின் இணைப்பு துண்டிக்கப்படும்,' என்றனர்.