ADDED : ஆக 20, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பருத்திக்கான இறக்குமதிக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்ததை 'ஓஸ்மா' வரவேற்றுள்ளது.
இச்சங்க தலைவர் அருள்மொழி கூறுகையில்,''மத்திய அரசு செப்., 30 வரை பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளதை வரவேற்கிறோம். வரிவிலக்கை ஆண்டு முழுவதும் வழங்கினால், ஜவுளித்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், பாலிஸ்டர் விஸ்கோஸ் மீதான க்யூ.சி.ஓ., ஆர்டரை நீக்கி, விஸ்கோஸ் பாலிஸ்டரை தடை இல்லாமல் இறக்குமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்,'' என்றார்.