/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சாலை மறியல்
/
கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சாலை மறியல்
ADDED : நவ 21, 2025 06:59 AM
மேட்டுப்பாளையம்: அண்மையில், நீலகிரி மாவட்டத்தில் கோவையிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வாடகைக்கு சென்ற கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரை, அங்குள்ள நீலகிரி மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, கோவை கால் டாக்ஸி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கல்லாறு இ-பாஸ் சோதனை சாவடியில், சாலை மறியலில் ஈடுபட்டனர். கால் டாக்ஸிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

