/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனம் மோதியதில் டெய்லர் படுகாயம்
/
வாகனம் மோதியதில் டெய்லர் படுகாயம்
ADDED : ஏப் 04, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள, முடீஸ் தோணிமுடி எஸ்டேட் இரண்டாம் பிரிவை சேர்ந்தவர் ராமசந்திரன், 56. இவர், முடீஸ் பஜாரில் டெய்லர் கடை வைத்துள்ளார். இந்நிலையில், முடீஸ் கோவில் திருவிழாவையொட்டி, பணம் வசூல் செய்ய வால்பாறை நகருக்கு கோவில் கமிட்டிகளுடன் நேற்று காலை சென்றார்.
மாலையில், ரோட்டில் நடந்து சென்ற போது, அதிவேகமாக வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த அவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற கார் குறித்து, வால்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

