/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால்துறை சார்பில் பொதுமக்களுக்கு டீ!
/
தபால்துறை சார்பில் பொதுமக்களுக்கு டீ!
ADDED : மே 22, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு, வெள்ளலுார் தபால் நிலைய ஊழியர்கள், பொதுமக்களுக்கு தேநீர் வழங்கினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் படி, ஆண்டுதோறும் மே 21ம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, வெள்ளலுாரில் உள்ள கிளை தபால் நிலையத்தில் பணிபுரிபவர்கள், பொதுமக்களுக்கு நேற்று தேநீர் வினியோகித்து, தேநீர் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.
இதில், போஸ்ட் மாஸ்டர் தண்டாயுதபாணி, தபால்காரர்கள் செல்வராஜ், அங்கமுத்து, கவுரிசங்கர், கவி தர்ஷினி, உதவியாளர் கிருத்திகா ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேநீர் வழங்கினர்.