/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போனஸ் கேட்டு கலெக்டரிடம் மனு
/
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போனஸ் கேட்டு கலெக்டரிடம் மனு
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போனஸ் கேட்டு கலெக்டரிடம் மனு
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போனஸ் கேட்டு கலெக்டரிடம் மனு
ADDED : அக் 29, 2024 11:56 PM
கோவை : வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்க வேண்டும் என, கோவை மாவட்ட சி.ஐ.டியு., தோட்டத்தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் கலெக்டருக்கு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை பகுதியில் ஏழுக்கும் மேற்பட்ட தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்கள் உள்ளன. தேயிலைத்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், குறைந்த சம்பளத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பல ஆண்டுகளாக வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை, அவர்கள் வாங்கும் அடிப்படை சம்பளத்தில், 8.33 சதவீதம் போனசாக வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைக்கு உள்ள விலைவாசிக்கு, இந்த தொகை ஏற்றதாக இல்லை. குறைந்த பட்சம் ஒரு நபருக்கு, 6000 வரை வழங்கினால், உதவியாக இருக்கும்.
தேயிலை தோட்ட நிறுவனங்கள் வரும், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே, எஸ்டேட்டில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முன் பணமாக, 5000 ரூபாய் வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.