/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
ADDED : பிப் 21, 2026 07:49 AM

வால்பாறை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியுள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில், தேயிலை முக்கிய தொழிலாக உள்ளது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தேயிலை துாள், குன்னுார், கோவை, கொச்சின் போன்ற ஏல மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறையில்பருவமழைக்கு பின், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பனிப்பொழிவு குறைந்து, பகல் நேரத்தில் வெயில் நிலவுகிறது. இதனால், எஸ்டேட்களில் தேயிலை செடிகள் துளிவிடத்துவங்கியுள்ளன.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை செடிகளில் இலை பறிப்பு அதிகரித்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேயிலை தோட்ட அதிகாரிகள் கூறுகையில்,'வால்பாறையில் ஜனவரி மாதம் முதல் மழையின் தாக்கம் குறைந்து வெயில் நிலவுகிறது. இதனால், எஸ்டேட்களில் தேயிலை செடிகள் துளிர்விட துவங்கியுள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தேயிலை உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், காலை, மாலை நேரங்களில் ஊக்கத்தொகை அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
தேயிலை சீசன் துவங்கியுள்ளதால், சராசரியாக ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு, நுாறு கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை தேயிலை உற்பத்தி பரவலாக அதிகரித்து காணப்படும்.
இவ்வாறு, கூறினர்.

