/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 லட்சம் ரூபாய் மோசடி; டீக்கடைக்காரர் மீது வழக்கு
/
24 லட்சம் ரூபாய் மோசடி; டீக்கடைக்காரர் மீது வழக்கு
24 லட்சம் ரூபாய் மோசடி; டீக்கடைக்காரர் மீது வழக்கு
24 லட்சம் ரூபாய் மோசடி; டீக்கடைக்காரர் மீது வழக்கு
ADDED : ஜன 13, 2025 06:14 AM
கோவை; பெண்ணிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த டீக்கடைக்காரர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை, சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஷீலா ரஞ்சனி, 40. இவரது ஒரு மகன் லண்டனிலும், மற்றொரு மகன் ரஷ்யாவிலும் உள்ளனர்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ரமேஷ், ஷீலாரஞ்சனியுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். கடந்தாண்டு ரமேஷ், ஷீலாரஞ்சனியிடம் இருந்து ரூ.24. 85 லட்சத்தை பல்வேறு தவணைகளில் வங்கி வாயிலாக பெற்றுள்ளார். ஆறரை பவுன் தங்க நகையையும் பெற்றுள்ளார்.
திருப்பி தரவில்லை. இது குறித்து ரமேஷ் மீது ஷீலா ரஞ்சனி, சரவணம்பட்டி போலீசாரிடம்புகார் அளித்தார். வழக்குபதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.