ADDED : ஜன 29, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:காரமடையை சேர்ந்தவர் அருணாசலம், 27. காரமடை அருகே அரசு துவக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 மாணவர்களுக்கு டியூசனும் எடுக்கிறார். டியூசனுக்கு வரும் 12 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் அருணாச்சலம் ஈடுபட்டார். சிறுவன் தப்பி வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து ஆசிரியரை கைது செய்தனர்.