/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்
/
லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்
லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்
லாரிகள் இடையே சிக்கிய கார்: ஆசிரியை பலி; 4 பேர் காயம்
ADDED : ஏப் 15, 2025 07:07 AM

காங்கயம்; காங்கயம் அருகே லாரிகளுக்கு இடையில் கார் சிக்கி, ஆசிரியை பரிதாபமாக இறந்தார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கோவை, மயிலம்பட்டி, தனம் நகரை சேர்ந்தவர் தியாகராஜன், 65; இவரது மனைவி மரகதம், 57, மகன் நவீன்குமார், 35, மருமகள் அனிதா, 31, பேரன் சுதன், 3 ஆகியோருடன், தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம், காங்கயம், காடையூர் அருகேயுள்ள கோவிலுக்கு சாமி கும்பிட காரில் புறப்பட்டார். நவீன்குமார் காரை ஓட்டினார்.
கோவை - கரூர் ரோட்டில் காங்கயம் அருகே காடையூரில், ரோட்டோரம் நின்ற லாரி மீது கார் லேசாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், பின்னால் வந்த மற்றொரு லாரி மீது மோதி, மீண்டும் இன்னொரு லாரி மீது மோதியது. லாரிகளுக்கு இடையில் கார் சிக்கியது. காயமடைந்த, ஐந்து பேரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மரகதம் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மற்ற 4 பேரும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த மரகதம், தனியார் பள்ளி ஆசிரியை; நவீன்குமார், சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.