/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் கூட்டணி கொடியேற்று விழா
/
ஆசிரியர் கூட்டணி கொடியேற்று விழா
ADDED : ஆக 05, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, 42வது இயக்க நாள், கொடியேற்று விழா மற்றும் இயக்க தியாகிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் வீராசாமி தலைமை வகித்தார். வட்டார தலைவர் சவுந்தரராஜ் முன்னிலை வகித்தார். கல்வி மாவட்ட செயலாளர் குமரகுருபரன் வரவேற்றார். இயக்க நாள் கொடியேற்றி, மாநில துணை தலைவர் தங்கபாசு, மாவட்டத்தலைவர் ரங்கநாத மூர்த்தி பேசினர். வட்டார செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார். நிகழ்வில், மாவட்ட பொருளாளர் ராஜாத்தி, மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை, துணை தலைவர் பாலமுரளி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.