/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
/
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 16, 2025 08:45 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு வட்டார கிளை, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பாராட்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், 100 நாள் வாசிப்பு சவால் சான்றிதழ் பெற்ற, பொன்னாயூர், தாவளம், நெகமம், ராமநாதபுரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பணி மாறுதலில் சென்ற, வட்டார பொருளாளர் பிரிவு உபச்சார விழா, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொள்ளாச்சி வடக்கு வட்டாரம் சார்பில் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அதில், இந்தாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை ஆக., முதல் வாரத்தில் துவங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மாவட்ட செயலாளர் குமரகுருபரன், வட்டார தலைவர் சவுந்தரராஜ், வட்டார செயலாளர் பழனிக்குமார், பொருளாளர் மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.