/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
/
கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 03, 2025 11:24 PM
கோவை; கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலை, 11 உயர்நிலை மற்றும் 17 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட, 148 பள்ளிகள் செயல்படுகின்றன.
இப்பள்ளிகளின் ஆசிரியர்கள், மே-ஜூன் மாதங்களில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரினர். பணி மாறுதல் விரும்பும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் ஜூலை இறுதியில் பெறப்பட்டன. கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கவில்லை.
மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்ப்சன் கூறுகையில், “ஆரம்பப்பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து பணிகளும் முடிந்து விட்டன,” என்றார். சில ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும், சிலர் வேண்டாம் என்றும் கூறுவதால், தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக, மாநகராட்சி கல்விப்பிரிவினர் தெரிவித்தனர்.