/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியை கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை
/
ஆசிரியை கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை
ADDED : ஜூன் 13, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ராதிகா, 47. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் மகேஷ் குமார், 52, அடிக்கடி மது அருந்திவிட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் மகேஷ் குமார், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோவில் ஆற்றின் பாலத்தின் மேல் நின்று, பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.-----