/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தலைசிறந்த ஆளுமைகளை ஆசிரியரால் உருவாக்கலாம்'
/
'தலைசிறந்த ஆளுமைகளை ஆசிரியரால் உருவாக்கலாம்'
ADDED : பிப் 28, 2024 09:35 PM

கோவை : மேட்டுப்பாளையம், மோத்தேபாளையம், எஸ்.எஸ்.வி.எம்., விதான் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின், 10வது ஆண்டு விழா நடந்தது.
ஒருங்கிணைந்த கல்விக்குழுமத்தின் செயலர் மோகன்தாஸ், நிர்வாக அறங்காவலர், தலைமை வகித்தனர். பல்வேறு நாடுகளின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், 'விஸ்வ நர்த்தனா' என்ற கருத்துருவில், மாணவர்கள் நடன நிகழ்வை அரங்கேற்றினர்.
சிறப்பு விருந்தினராக, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்று, கடந்த பொதுத்தேர்வில், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டில் மாநில, தேசியளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், '' பள்ளிப் பருவமே தனிமனித ஒழுக்கத்தையும், அடிப்படைக் கல்வியையும் போதிக்கிறது. நல்ல பள்ளிச்சூழல், சிறந்த ஆசிரியர்கள் மூலம் தலைசிறந்த ஆளுமைகளை உருவாக்க முடியும். வாய்ப்புகளை பயன்படுத்தி பெற்றோர்க்கும், நாட்டிற்க்கும், தாய்மொழிக்கும் மாணவர்கள் பெருமை சேர்க்க வேண்டும்'' என்றார்.

