ADDED : அக் 09, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை. : கோவை டவுன் ஹாலில் உள்ள மாவட்ட திட்ட அலுவலக வளாகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள், முன் பருவக் கல்வி, பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உட்பட ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை கீழ் பணியாற்றும் பணியாளர்களின் செப்., மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என, கோஷங்களை எழுப்பினர்.
ஆசிரியர் பயிற்றுனர் வேல்குமார் தலைமை தாங்கினார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி, கலந்து கொண்டனர்.