/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசின் இரட்டை நிலைபாட்டை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அரசின் இரட்டை நிலைபாட்டை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசின் இரட்டை நிலைபாட்டை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசின் இரட்டை நிலைபாட்டை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 08, 2025 08:46 PM

கோவை; தமிழகத்தின் 163 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பதவி உயர்வு வழங்க மறுக்கப்படுவதை கண்டித்து, கோவை மண்டல பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று (ஆக. 8) கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்த 60 பேருக்கு உடனடி பணி மேம்பாடு வழங்கல்; தேர்தல் வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தல்; பாரதியார் பல்கலைக்கழக ஈரோடு விரிவாக்க மையத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான 6 மாத ஊதியத்தை வழங்கல்; அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆசிரியர் சங்கத் தலைவர் அருண் பாரத் கூறுகையில், “பணி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி ஆசிரியர்கள் பதவி உயர்வும், அதற்கான பணப்பயன் களும் பெறுகின்றனர். ஆனால், அதே திட்டத்தில் உள்ள, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது, உயர்கல்வித் துறை வகுக்கும் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது,” என்றார்.